வெட் வரி சட்ட மூலத்தில் மேலும் திருத்தம் தேவை

533 0

08-1454921138-mahinda-amaraveeraவெட் வரி சீர்த்திருத்த சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அதற்கு ஆதரவளிக்கு முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையிலும் இது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதுவரையில் அதற்கு வாக்களிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.