கைதி தப்பியோட்டம்

381 0

Daily_News_7329174280167வழக்கு விசாரணை ஒன்றின் பொருட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பு ஒன்றில் பொருட்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக இரத்தினபுரி நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்பொருட்டு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகத்துக்குரியவர் மறியலில் இருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் துஸார உபுல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்றவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.