வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறயிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் ஊர்காவற்றுஐற நீதவான் நீதிமனறத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது மன்றில் 12 கொலை சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதே போன்று இவ்வழக்கினை கொண்டு நடாத்தும் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரியும் மன்றில் தோண்றியிருந்தார்.
இருப்பினும் வழக்கு விசாரணை அறிக்கைகள் எவையும் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் குறித்த வழக்கினை எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாக்கிழமை வரைக்கும் ஒத்திவைக்குப்பட நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.