யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விரைவில் விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அரசாங்கம் உரிய முறையில் அவதானத்தை செலுத்தி நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.