வருமானம் ஈட்டக்கூடிய அரசாங்கமே நாட்டுக்கான தேவை – ஜே.வி.பி

257 0

வருமானம் ஈட்டக்கூடிய அரசாங்கம் ஒன்றே நாட்டுக்கான தேவையாக உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கித்துல்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்கள் வருவாய் ஈட்டக்கூடிய பொருளாதார முறைமையை பின்பற்றவில்லை.

இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது.

இதனை சமாளிப்பதற்கு மக்களிடம் அதிக வரி அறவிடப்படுகின்றது.

எனவேஇ ஆட்சி மாற்றம் மட்டுமல்லாது அரசாங்கம் பின்பற்றுகின்ற பொருளாதார அனுகுமுறைகளும் மாற்றப்பட வேண்டும் எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment