யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த வகையில் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளைஇ வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களும் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படிஇ வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடாதென வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
யாழப்பாணம் நல்லூர் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது காயமடைந்த அதிகாரியொருவர் நேற்றைய தினம் மரணமடைந்தார்.
எனினும் இந்த சம்பவம்இ திட்டமிடப்பட்டோ அல்லது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தோ நடத்தப்பட்டதல்லவென காவல்துறை ஊடக பேச்சாளர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தாக்குதலை நடத்தியவரின் உறவினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகத்திற்குரியவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ நீதிபதி இளஞ்செழினுக்கு காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.