புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது

389 0

w.market clothes.1சட்ட விரேதமானமுறையில் இறக்குமதி செய்து, வர்த்தக நிலையங்களுக்கு துணி வகைகளை விநியோகித்த, புறக்கோட்டையில் உள்ள பிரசித்தமான விற்பனை நிலையம் ஒன்று மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

சுங்கத் திணைக்களம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனம் குறித்த துணி வகைகளை இறக்குமதி செய்தமை மற்றும் விநியோகித்தமைக்கான உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலேயே, அது மூடப்பட்டுள்ளது.

இதேபோன்ற மேலும் நான்கு வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நிறுவனம் வருட காலமாக வெட் வரி செழுத்தாமல் துணி வகைகளை இறக்குமதி செய்திருப்பதாகவும், இதனால் வருடம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரூபாய் வரையில் அரசாங்கத்திற்கு வரி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.