கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கான காலம் மணித்தியாலக் கணக்கில் உள்ளதுபோல் தோன்றுவதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் அரசியலில் உருவாகவுள்ள மாற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கான காலம் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அது மணித்தியாலக்கணக்கில் உள்ளதுபோல் தோன்றுகின்றது.
மாகாணசபையின் ஆயுட்காலம் முடியும்போதே அது கலைக்கப்படவேண்டும். அதன் காலத்தை நீடிப்பதாக இருப்பின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டும்.
இருப்பினும், எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரியில் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தியே தீருவோம் என மைத்திரி பால சிறிசேன உறுதியாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.