குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மூன்று யோசனைகள் அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சேரும் 700 டொன் குப்பைகளில் 300ஐ தற்போது கம்போஸ்ட் செய்து வருவதாகவும், மேலும் 100 டொன் குப்பைகளை மீள்சுழற்சி செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வரும்காலங்களில் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.