நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

462 0

13938533_882460688526254_4366983135053458918_nஅவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?

தமிழீழ அரசோ அல்லது அரசு உரிமையோ உங்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் அந்த மண்ணிற்கு இனி எப்போதும் கால்வைக்காதவர்களாகக்கூட இருந்தாலும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நீங்கள் யார் என்ற கேள்வியை யாரும் எப்போதும் கேட்க வாய்ப்பிருக்கிறது.

அப்போது நீங்கள் அவுஸ்திரேலியர்கள் என்று சொன்னால்கூட Originally From? என்று கேட்பார்கள். அப்போது உங்களுக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கும்

1) நான் சிறீலங்கன் தமிழ்
2) நான் தமிழீழ தமிழன்

என்பதுதான் அவை.

இந்த இரண்டில் எதைச் சொல்வதென்பது உங்கள் உரிமை. ஆனால் தமிழீழ தமிழன் என்று ஏன் சொ13882360_882472165191773_346179932896161176_nல்லவேண்டும் என்று சொல்வது எமது கடமை.

ஒரு சிறு விளக்கம் உங்களுக்காக..

ஈழத்தீவில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும்

1) தமக்கென்று தனி மொழி
2) தமக்கென்று தொடர்ச்சியான நிலப்பகுதி
3) தமக்கென்று தனித்துவமான பொருளாதார வாழ்க்கை அமைவு
4) பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஒரு தனி இனம் என்கிற உளவியல்

ஆகியவை கொண்ட இருவேறு தேசிய இனங்கள்.

ஒரு இனமானது தேசிய இனம் என்ற அந்தஸ்தைப் பெறுவது சாதாரண விடயம் அல்ல. உலகில் தேசிய இனங்களுக்கான இடம் மிக உயர்வானது. (இப்போது நாடு வைத்திருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற விடயங்கள் எல்லாம் அதற்குப் பிற்பாடுதான்)

இன்றைய வியாபார உலகில் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் மற்றவர்கள் பெருமையாக பார்க்கவும் மதிக்கவும் வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஒரு தேசிய இனம் என்று உங்களைக் காட்டிக்கொள்வது மிகமுக்கியமானது.

ஆகையால் I am Srilankan Tamil என்பதை விட I am Tamilan From Tamil Eelam என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது தான் ஒப்பீட்டளவில் உங்கள் பெறுமதியை அதிகரித்து வைத்திருக்கும்.

நாமோ அல்லது யாருமோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தீவைத் தவிர தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பும் உரிமையும் உள்ள தனித் தேசம் வேறெங்கும் கிடையாது.

ஆகையால் சிங்களமக்கள் I am Sinhalese from Sri Lanka என்றும் தமிழ் மக்கள் I am Tamilan From Tamil Eelam என்றும் அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிட்டு, ஒரு தீவில் வாழும் இரு தேசிய இனங்கள் என்ற எங்கள் சுய கௌரவத்தை நிலைநாட்டுவதோடு நமது பண்பாட்டின் வாயிலாக எழுந்துநிற்கும் நாங்கள் இரு வேறு தனியினங்கள் என்ற எம் உளவியலை வலுப்படுத்துவோம்.