28 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் 38 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எகிப்திய நீதிமன்றம் ஒன்று நேற்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
குறித்த கொலையுடன் தொடர்புடைய 15 பேருக்கு ஆயுள் தண்டனையும் எட்டு பேருக்கு 15 வருட சிறை தண்டனையும், 15 பேருக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு கெய்ரோ நகரில் வைத்து குறித்த சட்டத்தரணி மீது கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் குறித்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று குற்றம் நிறூபிக்கப்பட்டதை அடுத்து எகிப்து நீதிமன்றம் ஒன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.