அண்மையில் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய காணாமல் போனோர் தொடர்பான சட்டமானது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த சட்டத்தின் சில சரத்துக்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சட்டமானது இலங்கையின் அரசியல் அமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகமானது, நீதிமன்றத்தை போன்று செயற்படும் அதேவேளை நீதிமன்றத்தினால் கேள்வி எழுப்ப முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.