தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் – டக்ளஸ்

772 0

அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என ஈபிடிபி தெரிவித்துள்ளது.

அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனை சந்தித்தபோது ஈபிடிபியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்த இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் முன்வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவலக்குரல் எழுப்பியபோது சர்வதேச சமூகம் உதவ முன்வரவில்லை.

மரணத்தருவாயில் இருந்து கொண்டு தமிழ்மக்கள் முன்வைத்த அந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை.

எனவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழ் மக்களே தீர்வுகளைக்கான வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டுள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் அக்கறை தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை விட வேறுபட்டதாக இருக்கின்றபோதும், தேர்தல்களின்போது வாக்குகளை அபகரிப்பதற்காக தமிழ்மக்களிடம் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் தகர்க்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Leave a comment