அரசியல் வாதிகள் மீண்டும் இனவாதத்தை பயன்படுத்தி இலாபம் பெற முயற்சிப்பதாக கிராமிப பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
30 வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மக்கள் யுத்தத்தினால், விடுதலை புலிகள் மற்றும் அரச படை ஆகிய இரண்டு தரப்பினராலும் வேதனைகளை அனுபவித்துள்ளனர்.
தற்போது அந்த அச்சம் முற்றாக நீக்கப் பட்டுள்ளது.
யுத்ததின் பின்னர் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என முனைந்தாலும் யுத்தம் முடிந்து நெடுநாள் கழிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.
இப்போதுள்ள சில அரசியல் தலைவர்கள் மீண்டும் ஒரு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்து அவற்றினூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பிரதேசத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று இடம்பெறாது என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் பி ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.