மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் அது ஸ்ரீலங்கா சுதந்திர கடசிக்கு பெரும் பாதிப்பாக அமையும் என கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரக்காபொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்N;பாது அவர் இதனை தெரிவித்தார்.
முன்னதாக 11 நாடாளுமன்ற உறுப்புரிமை கொண்ட மாவட்டமாக குருணாகல் இருந்த நிலையில், நாடாளுமன்ற மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டும் எட்டு ஆசனங்களாக குறைவடைந்தது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக சிலர் வேறு கட்சியில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தயாராகிவருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியே புதியகட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனை மகிந்த ராஜபக்ஷ தமக்கு தெரியாது என்று கூற முடியாது என துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த ஆட்சியையும் மகிந்த ராஜபக்ஷவையும் சீரழித்த பெசில் ராஜபக்ஷ தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை போலவே நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்க்காலத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்க முயற்சித்துவருவதாக குற்றம் சும்த்தியுள்ளார்.