2018 ஆம் ஆண்டு முதல் 2037 ஆம் ஆண்டுவரை இலங்கையின் மின் உற்பத்திக்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைகளில் நிலக்கரி பாவனை அற்ற மின்னுற்பத்தி திட்டத்துக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மக்கள் கருத்துக்கள் மற்றும் சூழலின் நன்மை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி மூலமான மின்னுற்பத்தியின் மூலம் சூழல் பெரும் அளவில் தாக்கத்துக்கு உட்படுகின்றது.
அத்துடன் அடுத்துவரும் இருபது வருடங்களுக்குள் இயற்கை எரிவாயு மூலம் 4 ஆயிரத்து 800 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தமித குமாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சூரிய வெளிச்சத்தின் மூலமான மின்னுற்பத்தியை ஆயிரத்து 389 மெகாவோட் வரை அதிகரித்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்