வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் பதவி விலகினார்.

353 0

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சூன்ஸ் ஸ்பைசர் பதவி விலகியுள்ளார்.

அமெரிக்காவின் தகவல் தொடர்பு இயக்குநராக அந்தோனி ஸ்காராமுச்சி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், கடந்த மே மாதம் பதவி விலகியிருந்தார்.

இதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, நியூயோர்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுச்சியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டார்.

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சூன்ஸ் ஸ்பைசர் பதவி விலகியுள்ளார்.

Leave a comment