இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் ஆதரவு

424 0

minister-of-foreign-affairs-stephane-dion-as-the-liberal-govஇலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவின் உந்துதலை, கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நியூஸ் கனடா இதனை தெரிவித்துள்ளது.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் டியன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதன்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் முன்னைய கொன்வவேட்டிவ் அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது இலங்கை அரசாங்கத்துடன் சிறந்த உறவைக்கொண்டிருக்கவில்லை.
அதேநேரம் இலங்கையின் முன்னாள் அரசாங்கமும் போர்க்குற்ற விடயங்களில் சர்வதேச அழுத்தங்களை தவிர்த்தே வந்தது.
இந்தநிலையில் கனடாவின் புதிய லிபரல் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் உறவுக்கொண்டிருப்பதில் கனடாவில் உள்ள தமிழர்கள் வெறுப்பை கொண்டிருக்கவில்லை.
எனினும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக அழுத்தங்களை புதிய அரசாங்கம் கொடுக்கவேண்டும் என்று தமிழர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை கனடா, இலங்கை விடயத்தில் சரியான பாதையில் செல்கிறது. எனினும் இன்னும் பல விடயங்களை நிறைவேற்றவேண்டியுள்ளது என்று கனேடியன் தமிழ் காங்கிரஸின் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.