
மேற்படி விடயம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று காலை 11.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்ற புலனாய்வு துறையினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள்.
ஆனாலும் குறித்த விசாரணைக்காக கொழும்புக்கு வருவதற்கு நான் தயாராக இல்லை. மேலும் கொழும்பு வருவதற்கு இயலாத நிலையிலும் நான் உள்ளேன் எனவே குறித்த விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்தும் படியும் விசாரணையாளர்களை யாழ்ப்பாணம் அனுப்பும் படியும் தமக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தவர்க ளுக்கு கூறியுள்ளேன் என சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.