தமிழக சுகாதாரத்துறை எடுத்த தொடர் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. என்று சகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை எடுத்த தொடர் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு காரணமாக காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. என்று சகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காய்ச்சல், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 13 மற்றும் 18-ந்தேதிகளில் அனைத்து குடும்ப நலத்துறை அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளன.
கொசுக்களை கட்டுப்படுத்தும் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளை தொடர்ந்து சிறப்பாக நடைபெற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, குறும்படங்கள் திரையிடுதல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று களப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காய்ச்சல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.