வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் – நாளை அமைச்சரவைக்கு

768 0

z_pi-govt-to-attract-50-bankவெட் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியரமச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மோதரை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த சீர்திருத்த சட்ட மூலம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெட் வரி சீர்த்திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நாளைய தினம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக குறிப்பிட்டார்.
இதனிடையே, வெட் வரி சீர்த்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதத்திர கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் 10ஆம் 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வெட் வரி சீர்திருத்த சட்ட மூலத்திற்கு தாம் ஆதரவு அளிக்க உள்ளதாக, அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு, தாங்கள் தயாராக இல்லை என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.