ஐ.நா அரசியற்துறை இணைப் பொதுச் செயலாளர் கூட்டமைப்பை சந்திக்கிறார்.

281 0

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியற்துறை இணைப் பொதுச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மென்  இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று அவரை சந்திக்கவிருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமை இலங்கை வந்த இணைப் பொதுச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மென் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்.

அத்துடன் சர்வமதத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment