காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதியீனம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பிரதமர் மோடி இன்னும் அமைதி காத்து வருகின்றமை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்றின் தளபதியான புர்ஹான் வாணி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த 31 நாட்களாக அங்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இடம்பெற்று வருகின்ற வன்முறைகளால் இதுவரையில் 60 பேர் பலியாகினர்.
மேலும் நூறு;றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.