வரிகளை நீக்கினால், முதலீடுகள் அதிகரிக்கும்- ஐரோப்பிய ஒன்றியம்

1919 0

இலங்கை அரசாங்கம், இறக்குமதி வரிகளை குறைத்து, வரிகளை நீக்கி, ஊழல் அற்றநிலையுடன் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தினால், சர்வதேச முதலீட்டாளர்கள்,இலங்கையில் முதலிட முன்வருவர்.

அத்துடன் ஐரோப்பியாவின் திறந்த ஏற்பாட்டின் நன்மையையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்

ஐரொப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லாய் மார்க், இது தொடர்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ஐரொப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் நன்மைகளை இலங்கை விரைவில் எதிர்ப்பார்க்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் போர் இடம்பெற்றபோது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது
எனினும் போர் முடிவடைந்து 8 வருடங்களாகியும் பொருளாதாரத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment