பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் குறைந்த பட்சம் 53 பேர் பலியாகினர்.
தென் மேற்கு பாகிஸ்தானின் குவேட்டா நகரின் வைத்தியசாலை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் முக்கிய சட்டத்தரணி ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்லான சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளருகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதலை அடுத்து துப்பாக்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.