மீன்பிடித்தல் தொடர்பான தகவலை பதிவு செய்யவென இழுவைப் படகுகளுக்காக டெப் கணனிகளை பெற்றுக் கொடுக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இழுவைப் படகுகளுக்காக இரண்டாயிரத்து 238 டெப் கணனிகள் பெற்றுக் கொடுக்கப்படும். அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தயாரித்துள்ளது. இந்த மென்பொருள் பயன்பாடு மற்றும் டெப் கணனிகளை பயன்படுத்துவது குறித்து மீனவ சமூகத்திற்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கடற்பகுதியில் மீன் வளத்தை பெற்றுக் கொள்ளும்போது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு இழுவைப் படகு ஊடாகவும் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தரவுகளை கணனியில் பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் அந்த சகல தரவுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
கடல் வளம் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறியமை காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது மீன் ஏற்றுமதித் தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.