2017 ஆம் ஆண்டில் இருந்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்துக்கு வெளிமாவட்ட மாணவர்களை உள்வாங்குவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.
அம்பேகமுவ மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்களை ஒரு சில பாடசாலைகள் பரீட்சையின் இறுதி நேரத்தில் உள்வாங்கியுள்ளன.
இது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தற்பொழுது ஒரு அதிபர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்காக உயர்தர பாடத்துக்காக உயர்தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குகின்ற போது, வெளிமாவட்ட மாணவர்களை உள்வாங்க முழுமையான தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.