தாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது, முன்னர் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி, ராஜபக்ஷவினர் அளவுக்கு ஊழல்களை மேற்கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து தாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது நாட்டின் பொருளாதார நிலைமை சீராக இருந்தது.
அதனால் தம்மால் நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முன்னேற்ற முடிந்தது.
எனினும் மகிந்த அரசாங்கம் யுத்தத்தை வெற்றிக் கொண்டதாக கூறிக்கொண்டு, நாட்டை வீணடித்துள்ளது.
இதனால் நாடு தற்போது பாரியநெருக்கடியில் இருக்கிறது.
மகிந்தவுடன் தமக்க தனிப்பட்ட கோபங்கள் எவையும் இல்லை.
ஆனால் யுத்தத்தை வெற்றிக் கொண்டமைக்காக தம்மை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றுமாறு மகிந்த கோருவதில் எந்த நியாயமும் இல்லை என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.