அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருவழி வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்நிமித்தம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக விடயங்களுக்கான உதவி செயலாளர் சார்ல்ஸ் எச் ரிவ்கின் இலங்கை வருகிறார்.
எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதாக, அமரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.