கடந்த மாதம் மியன்மாரில் வானூர்தி விபத்திற்கான காரணம் – அரச ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

313 0

கடந்த மாதம் மியன்மாரில் இடம்பெற்ற பாரிய வானூர்தி விபத்திற்கான காரணம், காலநிலை சீர்கேடு என மியன்மார் அரச ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

சீன தயாரிப்பான இந்த வானூர்தி கடந்த மாதம் 7ஆம் திகதி அந்தமான் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியது.

இதில் பயணித்த 122 பேரும் பலியாகினர்.

கடுமையான காற்றுடனான முகில் கூட்டத்தினுள் வானுர்தி நுழைந்த போது விமானி கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வானூர்தியின் இயந்திரம் செயலிழந்ததை அடுத்து விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment