இலங்கைக்கு மற்றும் ஒரு ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்து சர்ச்சைகளை ஏற்படுத்திய பயங்கரவாதம் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கையாளர் பென் எமர்சனை அடுத்து இன்று ஐக்கிய நாடுகளின் சபையின் அரசியல்;துறை இணைப் பொதுச்செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
இன்று அவர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இதன் விபரங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி ஃபெல்ட்மன் ஏற்கனவே 2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இலங்கைக்கு பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.