ஆளும் அரசாங்கம் ‘சுயாதீன செய்தி வெளியீட்டு சபை சட்டமூலத்தை’ கொண்டுவந்த போதிலும் செய்தி தணிக்கையில் ஈடுபடுவதாக முற்போக்கு சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் புதிதாக அமுலாக்கவுள்ள ஊடக சட்ட மூலம்இ ஊடகவியலாளர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சதித்திட்டமாகும்.
இந்த சட்டமூலத்தின் கீழ்இ பாதுகாப்பு மற்றும் குற்றவியல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் செய்திகளுக்கான மூலத்தை வெளிப்படுத்த நீதிமன்றத்தினால் செய்தி ஆசிரியருக்கு உத்தரவிட முடியும்.
இவ்வாறு சில செய்தி மூலங்கள் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில்இ அதன் பின்னர் எந்த நிறுவனத்தில் இருந்தும் செய்திகள் வழங்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய சட்ட மூலத்தின் கீழ்உருவாக்கப்படவுள்ள ஊடகக் கட்டுப்பாடு தொடர்பான குழுஇ உயர் நீதிமன்றத்துக்கு மேலாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.