இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மக்களுக்கு இல்லை – பிரதமர் 

445 0

மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மற்றும் சந்தேகம் மக்களின் சிந்தனையில் இருந்து நீங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச மொழிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘பீப்பள் ஒப் ஸ்ரீலங்கா’ நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்தாங்கிய நிலையில் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்இ சபாநாயகர் கரு ஜயசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றிய பிரதமர் தற்போது நாடு இனவாத ரீதியான பிரச்சினைகளில் இருந்து விடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு இருந்த அச்சம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் பொருளாதாரம் சார்ந்த கேள்விகளையே அரசாங்கத்திடம் கேட்கின்றனர்.

இது அரசாட்சியில் இருந்து இனவாதம் நீக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment