நுவரெலியா நானுஒயா பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமியொருவர் மரணித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த 42 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுரரெலியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்க காவல்துறையினர் எதிர்;ப்பை வெளியிடாததை அடுத்து, அவர்களுக்கு பிணை வழங்க நீதான் இணக்கம் தெரிவித்ததார்.
நானுஒயா பகுதியில் கடந்த மாதம் 15ஆம் திகதி பாரவூர்தி ஒன்று பாடசாலை மாணவியை மோதியதில் ஆறு வயதான அந்த சிறுமி ஸ்தலத்திலேயே பலியானார்.
இதனை அடுத்து அங்கு கூடிய பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு, பாரவூர்தியை தீ மூட்டினர்.
இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் 42 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன் மேலும் 12 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் இவர்கள் அனைவரும் தலா பத்தாயிரம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணைகள் இரண்டின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிது நீதவான் அவர்களுக்கு பிணை வழங்கினார்.