சயிட்டம் பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களுக்கு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஏற்படுத்தியதாக கூறப்படும் பாதிப்புக்கள் குறித்து பிரதமருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியக் குழுவினரை இணைத்துக் கொண்டு புதிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ராஜித்த சேனாரத்ன மறுத்துள்ளார்.
புதிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டாலும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது வைத்தியர்களே தவிர அமைச்சர்கள் அல்ல எனவும் ராஜித்த சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்திய சங்கங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பது அவர்களது செயற்பாடு என கூறிய அவர், அச் சங்கங்களுள் ஏற்பட்டுள்ள பேதங்கலால் புதிய தொழிற்சங்கம் உருவாகியிருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.