தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டை – நம்படகஸ்வெவ வாயிலை மறித்து பிரதேச மக்கள் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை – சூரியவெவ 100 அடி வீதியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் தமது வீடுகள் மற்றும் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உரிய முறையில் நஸ்டஈடு வழங்கப்படவில்லை எனக் கூறியே இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சூரியவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மஹஆரா, தெலவில்ல, அந்தரவெவ, பத்தேகம மற்றும் நம்படகஸ்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 463 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.