GST யை எதிர்க்க வேண்டும் ஏன்? – கருத்தரங்கம்

306 0

GST-யை எதிர்க்க வேண்டியது ஏன் எனும் GST வரி விதிப்பு மற்றும் அதன் பின்னணிகள் குறித்து விளக்கும் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் 16-7-17 ஞாயிறு அன்று சென்னையில் நடத்தப்பட்டது.நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

GST வரி விதிப்பு ஜனநாயக மறுப்பு என்றும், எளிய மக்களின் வாழ்க்கையை இந்திய ஒன்றிய பாஜக அரசின் இந்த GST வரி விதிப்பு எப்படியெல்லாம் சிதைக்கப் போகிறது என்பதைக் குறித்து விளக்கினர்.Informal sector எனப்படக்கூடிய 90 சதவீத மக்கள் நேரடியாக பங்கு பெறக்கூடிய அமைப்பு சாரா தொழில்களான சிறு, குறு, பாரம்பரிய தொழில்களை வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதை ஆவணங்களுடன் விளக்கினர். GST பெரு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் சேவை செய்யப்போகிறது என்பது குறித்தும் விளக்கினர்.

GSTயின் மூலம் ”ஒரே நாடு, ஒரே வரி” என்ற பெயரில் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, மாநில சுயாட்சி உரிமை அழிக்கப்படுவதையும், இந்த உரிமை மீறலை எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் குறித்து முழுமையாகப் பேசினர்.மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் மற்றும் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் சா.காந்தி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

இறுதியாக கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

காணொளி பதிவு

Leave a comment