விமல் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பார்வை திரும்பியுள்ளது!

297 0

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தசநாயக்கவுக்கு ஆதரவாக கருத்து கூறிய விமல் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பார்வை திரும்பியுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் விமல் வீரவங்சவிடமும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தசநாயக்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“கடத்தப்பட்ட 11 பேரும் விடுதலைப்புலிகள், திருமலையில் இருந்து மீன் லொறி ஒன்றில் வெடி குண்டு கடத்திய சம்பவத்திலேயே குறித்த 11 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் காணாமல் போனதற்காகவே தற்போது கடற்படையின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என புலனாய்வுப் பிரிவினரும், முப்படையினரும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் விமல் வீரவங்ச ஏன் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு தேவையான சட்ட ஆலோசனையை தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கப்பம் பெறும் நோக்கிலேயே குறித்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment