பேரறிவாளனை பரோலில் விடுவிக்கக்கோரி தாயார் அற்புதம்மாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நேரில் மனு

242 0

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து தனது மகனை பரோலில் விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தி வருகிறார்.
சட்டசபைக்கு இன்று வந்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசினார். சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் மனு அளித்தார்.
பேரறிவாளன் பரோல் விவகாரம் தொடர்பாக தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்த சட்டசபை கூட்டத் தொடரில் ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் சிவி.சண்முகத்தை நேரில் சந்தித்து அற்புதாம்மாள் மனு அளித்து இருந்தார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment