ரஷ்யாவை ஒட்டிய வடக்கு பசிபிக் பெருங்கடலில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

240 0

ரஷ்யாவை ஒட்டிய வடக்கு பசிபிக் பெருங்கடலில் 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை ஒட்டிய வடக்கு பசுபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா பகுதிக்கும், அலஷ்காவின் அலெயுடியன் பகுதிக்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவிற்குள் இந்த சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று  அலஷ்கா மாநிலத்தின் பல்மர் நகரில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் கூறுயுள்ளது. முன்னதாக நிலநடுக்கத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு அதிர்வுகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment