வங்க கடலை அதிரவைத்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி நிறைவு

512 0

வங்க கடலை அதிரவைக் கும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. கப்பல் களில் இருந்து விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

வங்க கடலை அதிரவைக் கும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படையின் கூட்டு கடற்பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. கப்பல் களில் இருந்து விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பறந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படையினர் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கூட்டு கடற்பயிற்சி நடந்தது.

விமானம் தாங்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக போர் விமானங்கள் வானில் செலுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இவர்கள் விமானங்கள் பறந்த காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தனர்.

இதில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா, ஐ.என்.எஸ். ரன்வீஜய், ஐ.என்.எஸ். ஷிவாலிக், ஐ.என்.எஸ். சயாத்திரி, ஐ.என்.எஸ். ஜோதி, ஐ.என்.எஸ். கமோட்டா, ஐ.என்.எஸ். கிர்பான் மற்றும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் (சி.வி.என்-68), ஏவுகணைகளை வழிநடத்தும் கப்பல் யு.எஸ்.எஸ். பிரின்ஸ்டன் (சிஜி.59), ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் கப்பல் யு.எஸ்.எஸ். ஹோவர்ட் (டிடிஜி-83), யு.எஸ்.எஸ். ஷூப் மற்றும் யு.எஸ்.எஸ். கிட் (டிடிஜி 100) மற்றும் விரைவாக செல்லும் லாஸ் ஏஞ்சலஸ் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இவற்றுடன் ஜப்பான் நாட்டு கடற்படையில் உள்ள சுய பாதுகாப்பு படை கப்பல் ஜெ.எஸ்.இஜிமோ (டிடிஎச்- 183). ஜெ.எஸ்.சஜாநமி (டிடி113) ஆகிய கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் கப்பலின் மேல்தளத்தில் உள்ள 4½ ஏக்கர் பரப்பரளவில் உள்ள விமான ஓடுபாதையில் 62 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல் விக்கிரமாதித்யா விமானம் தாங்கி கப்பலிலும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து விமானப்படை வீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக விமானங்களை வானில் செலுத்தி கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு விமானமும் 20 நிமிடம் பறந்துவிட்டு மீண்டும் கப்பலில் வந்து இறங்கியது. விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்தபடி போர் பயிற்சியில் ஈடுபட்டதால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

கடலில் மிதவை மூலம் வைத்திருக்கும் கண்ணி வெடிகளை எப்படி கண்டுபிடித்து முன்னேறி செல்வது? இயற்கை சீற்றங்கள் போன்ற சவால்களை எப்படி சமாளிப்பது?, நீர்மூழ்கி கப்பல் தடுப்பு போர் பயிற்சி, வான்வெளி தாக்குதலை எதிர்கொள்வது உள்பட பலவித பயிற்சிகள் குறித்து 3 நாடுகளின் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:-

மலபார் கூட்டு கடற்படை பயிற்சி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே பயிற்சியில் ஈடுபடுகிறோம். கடற்படையில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்காக நவீன தொழில்நுட்ப அறிவை இந்த பயிற்சியின் மூலம் பகிர்ந்து கொண்டோம். மிக முக்கியமாக இந்தோ- ஆசிய பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இந்த பயிற்சி உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a comment