அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 19 மாத குழந்தையை போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்திற்கு தங்களது குழந்தையை கொண்டு போதைப் பொருள் கடத்திய பெற்றோர்களை போலீசார் பிடித்தனர்.
போலீசாரின் குற்றச்சாட்டுபடி, ஒர்லாந்தை சேர்ந்த ரமிரெஸ்-லீல் மற்றும் சிந்தியா உரெஸ்தி ஆகியோர் மெக்ஸிகோ மாகாணத்தின் சர்வதேச நுழைவாயில் பாலம் வழியாக டெக்ஸா மாகாணத்தின் பிரைவுன்ஸ்வில்லி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது உரெஸ்தி மற்றும் அவளது குழந்தையின் உடலுக்குள் 6 போதைப் பொருள் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. போதைப் பொருளின் எடை மதிப்பு 7 பவுண்டுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் சட்டத்திற்கு விரோதமாக போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.