மொரட்டுவ பலக்கலைக்கழகத்தைப் போன்று, மேலும் 4 அரச நிறுவனங்கள் பூனைகள் மற்றும் நாய்களை இரகசியமாக அப்புறுவுப் படுத்தி இருப்பதாக இலங்கை மிருக நலன் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் நிறுவனர் இராகி கொடிதுவக்கு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கொதலாவலை பாதுகுhப்பு கல்லூரி, இராகம, கலுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை என்பனவும் இவ்வாறு மிருகங்களை அப்புறவுப் படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
இவ்வாறு நிலைமாற்றப்பட்ட பூனைகள் அசாதாரணமான முறையில் நடந்துக் கொள்ளும் காணொளிகள் தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.