உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் அடுத்தவருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான நகரமுதல்வர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதன்நிமித்தம் தற்போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக உள்ள விசேட ஆணையாளர்களின் பதவிக் காலம் ஆறு மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.