அன்டார்ட்டிகாவில் கடந்த வாரம் பிரதான பனிப்பாறையில் இருந்து பிளவடைந்த ஏ.68 என்ற பாரிய பனிப்பாறை, கடலை நோக்கி நகர ஆரம்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்மதிப் படங்கள் ஊடாக இது தெரியவந்துள்ளது.
6000 சதுரக்கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட இந்த பனிப்பாறைக்கும், அதன் பிரதான பாறையான லார்சன் சீக்கும் இடையிலான இடைவெளி தற்போது பெரிதாக அதிகரித்துள்ளது.
குறித்த பாறை கடல்நோக்கி தனித்து நகர்வது, ஆபத்தானவிடயம் என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.