11 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரத்தின் திசையில் இருந்து சமிக்ஞைகள்

306 0

11 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரத்தின் திசையில் இருந்து உலகத்துக்கு சந்தேகத்துக்கு இடமான சமிக்ஞைகள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ரொஸ் 128(ஜீ.ஜே.447) என்ற இந்த நட்சத்திரம், எமது சூரயனைக் காட்டிலும் 2800 மடங்கு ஒளி மங்கலானது என்று தெரிவிக்கப்படுகின்ற போதும், அதனைச் சுற்றி கிரகங்கள் இருக்கின்றனவா? என்று இன்னும் கண்டறியப்படவில்லை.

எனினும் அங்கிருந்து அந்நியமான சமிக்ஞைகள் கிடைத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியட்ரோரிகோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர்களால் இந்த சமிக்ஞைகள் கடந்த மே மாதம் பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வெளிக்கிரக சமிக்ஞைகளை பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள எரேசிபோ என்ற வானலை தொலைநோக்கி ஊடாக இந்த சமிக்ஞை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment