சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க இணங்கப்பட்டிருந்த கடன்தொகையின் அடுத்த தவணைக் கொடுப்பனை செலுத்து நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி 167.2 மில்லியன் டொலர் கடன்தொகை வழங்கப்படவுள்ளது.
3 ஆண்டு கால பகுதிக்குள் 1.1 பில்லியன் டொலர் கடன்தொகையை வழங்க சர்வதேச நாணயநிதியம் இணக்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி புதிய தவணைக் கடனை வழங்குவது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை பூர்த்தி செய்த நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையின் பொருளாதார நிலை குறித்து திருப்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக உள்நாட்டு இறைவரி சட்டமூலம் இலங்கையின் நிதி ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், அத்துடன் வரிவிதிப்பு, சமுக மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான வளங்கள் தொடர்பிலும் நாணய நிதியம் திருப்தி கொண்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கடன்தொகையை வழங்க நிறைவேற்று சபை அனுமதித்துள்ளது.
இதன்படி 1.1 பில்லியன் டொலர்கள் கடன்தொகையில் இதுவரையில் இலங்கைக்கு கிடைக்கும் தொகை 501.5 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது.