மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து பேசினார்.
அவருடன் டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, வாகை சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், நிர்வாகிகள் கு.க.செல்வம், கென்னடி, கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, அகஸ்டின்பாபு, வி.எஸ்.ராஜ், பாலவாக்கம் விஷ்வநாதன், குணசேகரன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மதன்மோகன், துணை செயலாளர் சிதம்பரம், மா.பா.அன்புதுரை, காமராஜ் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், மாணவர் அணியினர், இளைஞர் அணியினர். மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதி நிதிகள் என ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்பட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தில் கவிபூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமான பேர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.