சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

279 0
சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா மற்றும் கமரூன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகள், பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே அவர்களுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க  தெரிவித்தார்.
குறிப்பாக சிரியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் வர முயலலாம் என்பதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வருகை தருபவர்கள் மற்றும் அகதிகளாக வருகை தர முயற்சிப்பவர்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment