பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை – மனோ கணேசன்

430 0

thumb_large_mano_ganesanபல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின் சக்தியாகும்.
உலகில் எந்த ஒரு நாடும் தனி இனமாக வாழ முடியாது.
இதனை அனைவரும் உணரவேண்டும்.
இலங்கையில் பௌத்த மதம் பிரதான மதமாக உள்ளது.
சிங்களம் பெரும்பான்மை மொழியாக உள்ளது.
அதனை யாரும் நிராகரிக்க முடியாது.
அதேவேளை ஏனைய மொழி பேசும் மக்களும் மதங்களை பின்பற்றுபவர்களும் ஏனைய இனத்தவர்களும் வாழ வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.